ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொட்டும் மழை... கோயம்பேட்டில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டது குறித்து...

 Chief Minister joseph Vijay

ஆய்வு மேற்கொண்ட முதல்வர் சி. ஜோசப் விஜய் - டிஐபிஆர்

Published On :27 ஜூலை 2026, 9:48 pm IST

சென்னை கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 27) ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் கையில் குடை பிடித்தவாறு முதல்வர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மழையில் தனக்காக சாலையில் காத்திருந்த மக்களை நோக்கிச் சென்று கையசைத்தார். அவருக்கு வழிநெடுகிலும் இருபுறமும் காத்திருந்து மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது...

ஆய்வின்போது... - டிஐபிஆர்

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 438 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் நாளொன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிலையங்களும் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவு நீரைச் சுத்திகரித்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மேலும் உயர்தரத்தில் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான தரமான நீரை வழங்குவதாகும்.

நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தொழிற்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுவந்த குடிநீர், தற்போது பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா ரா.சபரிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் உ. பர்வீஸ், தலைமைப் பொறியாளர்கள் ஏ.இராதாகிருஷ்ணன், கு.பா.வைதேகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Summary

Chief Minister joseph Vijay conducts an inspection in the rain!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.