ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார் முதல்வர் விஜய்!

இம்மாத இறுதிக்குள் 73 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

C joseph vijay smart card distribution

பயனாளிகளுக்கு ஸ்மார்ட் அட்டையை வழங்கிய முதல்வர் சி. ஜோசப் விஜய் - DIPR

Published On :13 ஜூலை 2026, 6:41 pm IST

பெரம்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் புதிய குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் அட்டைகள்) வழங்கும் திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 13) தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், பயனாளர்காளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

முதல்வரான பிறகு தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்குச் சென்ற முதல்வர் சி. ஜோசப் விஜய், எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

பிறகு, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார்.

இம்மாத இறுதிக்குள் 73 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. புதிய நியாயவிலைக் கடையில் 10 குடும்பங்களுக்கு அடையாளமாக ரேஷன் பொருள்களை வழங்கினார்.

Summary

Chief Minister Vijay distributed new ration cards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.