ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

Engineering counseling

பொறியியல் கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு. - கோப்புப் படம்

Published On :13 ஜூலை 2026, 10:41 am IST

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.

இன்று தொடங்கியிருக்கும் கலந்தாய்வில், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு நடைபெறுகிறது. அடுத்து மாற்றுத் திறநாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் படிப்பை தேர்வு செய்யலாம். மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் படிப்பில் ஒன்று உறுதி செய்யப்பட்டு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டிருந்தார்.

ஜூலை 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

ஜூலை 20-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். இது ஒரு சில கட்டங்களாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.