பிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை (பிப். 28) இரவு தமிழகம் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி குஜராத் மற்றும் ராஜஸ்தான் பயணங்களைத் தொடர்ந்து நாளை இரவு 9 மணியளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை புதுச்சேரி செல்லும் அவர், அங்கு ரூ. 2,700 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 1 மாலை 3 மணியளவில் மதுரைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ. 4,400 கோடி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.
இத்துடன், மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் இடையிலான புதிய நான்கு வழி நெடுஞ்சாலையின் பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.
மேலும், அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு மற்றும் திருவாரூர் சந்திப்பு உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களையும் அவர் தொடக்கி வைக்கிறார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் ஒளிபரப்பு சேவைகளை வலுப்படுத்த, கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூரில் மூன்று புதிய ஆகாஷ்வாணி எஃப்எம் ரிலே டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Prime Minister Modi to visit Tamil Nadu and Puducherry on March 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் மோடி சாலைவலம்!
மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



