தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டிருப்பது, பாஜகவுக்கு தார்மீக மரண தண்டனை அளிக்கப்பட்டதற்கு இணையானது என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.
மேலும், சிபிஐ பொய்யாக ஜோடித்த வழக்கு என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், சிபிஐக்கு கண்டனம் தெரிவித்ததுடன் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ் தெரிவித்திருப்பதாவது:
”தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் நீதியும் உண்மையும் துணை நிற்கின்றன. குற்றச்சாட்டு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது உண்மையை மறைத்துவிட முடியாது.
இன்று நேர்மையான ஒவ்வொரு மனிதரும் பெருமூச்சு விடுவார்கள். பாஜக ஆதரவாளர்கள் ஆழ்ந்த அவமானத்தில் துடித்துக் கொண்டிருப்பார்கள். தில்லி மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பு, நாட்டின் எதிரிகளுடன் இணைந்து, சுதந்திரப் போராளிகளை தூக்கு மேடைக்கு அனுப்பிய தற்போதைய அரசின் நண்பர்கள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராக தகவல் கொடுப்பவர்களாகவும், நாட்டை அடிமைப்படுத்திய ஏகாதிபத்தியவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்காக அளவ்வு பார்த்தவர்களாகவும் இருந்தவர்கள். அந்த சித்தாந்தவாதிகளின் வாரிசுகள் இன்று மக்கள் மத்தியில் முகத்தை காட்டும் தகுதியை இழந்துவிட்டனர்.
இன்றைய தீர்ப்பு பாஜகவினருக்கு தார்மீக மரண தண்டனைக்கு இணையானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Kejriwal's release is a moral death sentence for BJP! Akhilesh Yadav
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும்: தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



