மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:49 am

வங்கதேசத்தில் கடந்த 2024-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு எதிா்ப்புப் போராட்டத்தின்போது, ரங்பூா் பல்கலைக்கழக மாணவா் அபு சயீத் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் (ஐசிடி) தீா்ப்பளித்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற 3 முன்னாள் போலீஸாருக்கு ஆயுள் தண்டனையும், பல்கலைக்கழக துணைவேந்தா் உள்பட 25 பேருக்கு சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

தண்டனை விதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் தற்போது தலைமறைவாகவுள்ள நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் ஏற்கெனவே சிறையில் உள்ளனா்.

இப்போராட்டங்களின்போது சுமாா் 1,400 போ் கொல்லப்பட காரணமாக இருந்ததாகக் கூறி, ஷேக் ஹசீனாவுக்கு இதே தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.