ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றவாளிகள் முகமது மசூம் ஷாகி மற்றும் ஹமீத் வலீதி ஆகிய இருவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இஸ்ரேலின் உளவுத் துறையான மொஸ்ஸாட் அமைப்புடன் இருவரும் தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
மனித உரிமைக் அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சீனாவிற்கு அடுத்ததாக உலகில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran executes two men convicted of links to Israel spy agency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம்

அமெரிக்க ஆதரவாளர்கள்..! ஈரானில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

வளைகுடா போர்! ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



