பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) மாலை நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது, அந்த மசோதாக்களுக்கு 298 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டுக்கான தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (ஏப். 18) இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மசோதாக்களால் தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனக் கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
முன்னதாக, இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்று இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been announced that Prime Minister Narendra Modi will address the nation tonight.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி ட்வீட்

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



