நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள சரக்கு சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி எண் கோரி ஆன்லைன் மூலம் வணிகர்கள் பதிவு செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி பதிவு செயல்முறை இணையவழி அடிப்படையிலேயே செய்யப்படுவதால் மிகவும் எளிதானது. gst.gov.in என்ற அரசு இணையதளத்தில் ஜிஎஸ்டி எண் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
வணிகர்கள், தொழில்முனைவோர், வரி தாக்கல் செயல்முறையை எளிதாக்குவதற்காக, நிதி அமைச்சகம் (MoF) ஜிஎஸ்டி பதிவு செயல்முறையை அண்மையில் எளிமைப்படுத்தியுள்ளது.
ஆண்டு விற்றுமுதல் ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் (மாநிலம் மற்றும் விநியோக வகையைப் பொறுத்து இந்தத் தொகை ரூ.40 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் என மாறுபடும்) ஒவ்வொரு வணிகத்துக்கும் ஜிஎஸ்டி-க்கு பதிவு கட்டாயம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றங்களின் அடிப்படையில் தேவையற்ற ஆவணங்கள் கேட்பது மாற்றப்பட்டு, ஜிஎஸ்டி கோரி விண்ணப்பிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது.
இதற்கு https://reg.gst.gov.in/ என்ற ஜிஎஸ்டி இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அதில், சேவைகள் என்பதை கிளிக் செய்து பதிவு என்பதில் புதிய பதிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அதில், எந்த வகையான வரி செலுத்துவோர் என்பதை தெரிவு செய்துவிட்டு, வணிகர் தன்னுடைய மாநிலம் மற்றும் மாவட்டத்தை உள்ளிடவும்.
பிறகு வணிக நிறுவனத்தின் பெயர், பான் அட்டை எண், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், கேப்சா எண் ஆகியவற்றை நிரப்பினால், செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளிடவும்.
இடையே, பான் அட்டை இல்லாதவர்கள் அங்கிருந்தே விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பிறகு, மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண்ணுக்கு வரும் இரண்டு ஓடிபிகளை சரியாக உள்ளிட்டு, தொடரவும். ஓடிபி வராவிட்டால் மீண்டும் அனுப்பவும் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

சப்மிட் செய்ததும் விண்ணப்பித்த வணிகருக்கு 15 இலக்க டிஆர்என் என்ற தற்காலிக பதிவு எண் கிடைக்கும். இந்த எண் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த டிஆர்என் எண்ணை குறித்து வைத்துக் கொள்ளவும்.
முதல் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதும் அடுத்த 15 நாள்ளுக்குள் இரண்டாம் பகுதியை டிஆர்என் எண்ணைப் பயன்படுத்தி நிறைவு செய்ய வேண்டும்.
தற்போது அதே சேவை பிரிவில் - பதிவு - டிஆர்என் வாய்ப்பைப் பயன்படுத்தவும். அதில் 15 இலக்க டிஆர்என் உள்ளிட்டு கேப்சாவை உள்ளிடவும். பிறகு, உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும், அதனை சரியாக உள்ளிடவும்.
அப்போது, வணிகர் விண்ணப்பித்த விண்ணப்பம் டிராஃப் வடிவில் இருக்கும். அதனைத் திறந்து அடுத்த பிரிவை நிரப்ப வேண்டும்.
அதற்கு, வணிகரின் புகைப்படம், வரி செலுத்துவோரின் விவரம், வணிகத்தின் ஆதாரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் அடிப்படையிலான விவரங்களை உறுதி செய்யும் முறையை நிறைவு செய்ய வேண்டும்.
இங்கு வணிகரின் பான் எண், கூட்டாளிகளைக் கொண்டு இயங்குவதாக இருந்தால் அவர்களது பான் அட்டைகள்,, ஆதார் கார்டு, ஒரு வணிகம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ், புகைப்படங்கள் மற்றும் முகவரி சான்றிதழ், வங்கிக் கணக்கு வரவு செலவு அறிக்கை மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலை, வணிகர் கையெழுத்திட்டு ஸ்கேன் செய்யப்பட்ட டிஜிட்டல் புகைப்படம் ஆகியவற்றை வணிகர் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
வணிகத்தின் விவரங்கள் பகுதியில் வணிக நிறுவனத்தின் பெயர், மாவட்டம் உள்ளிட்டவற்றை சரியாக உள்ளிட வேண்டும்.
தொடர்ந்து, வணிக நிறுவனம் உற்பத்தியாளரா அல்லது சேவை வழங்குபவரா அல்லது ஒருங்கிணைந்த பணியா என்பதை குறிப்பிட வேண்டும்.
வணிக நிறுவனத்தைத் தொடங்கிய நாள், நிறுவனத்தின் வரிக் கணக்கு விவரங்கள், ஜிஎஸ்டி பதிவு செய்வதற்கான காரணங்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
தற்போது எந்த வரி நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடலாம். கூட்டாண்மையில் இயங்கும் நிறுவனங்கள் என்றால், அதிகபட்சம் 10 பேரின் விவரங்களைப் பதிவு செய்யலாம். இவர்கள் அனைவருக்குமே பெயர், முகவரி, பிறந்தநாள், என அனைத்தையும் சரியாக பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
புகைப்படங்கள் ஆவணங்கள் என அனைத்தையும் பிடிஎஃப் அல்லது ஜேபக் வகைகளில் பதிவேற்றம் செய்யலாம். வணிக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகியின் விவரங்களயும் பதிவு செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஜிஎஸ்டி நிபுணர் யாரேனும் உதவினால் அவர்களது அடையாள எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை பதிவு செய்யலாம்.
பிறகு, வணிக நிறுவனம் இயங்கும் இடத்தின் விவரங்களை சரியாக அளிக்க வேண்டும். அதிகமான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது இருந்தால், அனைத்து ஆவணங்களையும் ஒரே கோப்பாக மாற்றியும் பதிவேற்றம் செய்யலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கினால் அது பற்றிய விவரங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தால் அந்த உற்பத்திப் பொருளை அதன் குறியீட்டு எண்ணுடன் தேர்வு செய்ய வேண்டும். வணிகத்தை நடத்துபவரின் வங்கிக் கணக்கு விவரங்களையும் முறையாக பதிவு செய்ய வேண்டும்.
பிறகு, ஸ்டேட் ஸ்பெசிஃபிக் தகவல்கள் என்பதில் சென்று தொழில்முறை வரி ஊழியர் குறியீட்டு எண், தொழில் வரி பதிவுச் சான்றிதழ் எண் மற்றும் மாநில கலால் உரிம எண் ஆகியவற்றை உரிமம் வைத்திருப்பவரின் பெயருடன் உள்ளிடவும். அந்தப் படிவத்தை சேமித்துவிட்டுத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
பிறகு படிவத்தை ஆதார் அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்யப்பட்டால் அதிகாரிகள் நேரில் வந்து உறுதி செய்வது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிட்டு, உறுதிமொழி அளித்துவிட்டு அதற்கான கையொப்பத்தை இணைத்து சப்மிட் செய்யவும்.
பிறகு, விண்ணப்பம் பதிவேற்றப்பட்டால், வணிகருக்கு விண்ணப்பப் பதிவு எண் எனப்படும் ஏஆர்என் மின்னஞ்சல் மற்றும் செல்போன் மூலம் வழங்கப்படும்.
இதன் பிறகு, ஜிஎஸ்டி விண்ணப்பப் படிவத்தின் நிலையை, இந்த ஏஆர்என் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
Summary
Explanation of the method of registering a GST number online.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொத்து, குப்பை வரிகளை குறைக்க வேண்டும்: வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தோ்தல் பிரசாரம் குறித்த அனைத்து நுணுக்கங்களையும் விடியோ பதிவு செய்ய ஆட்சியா் உத்தரவு

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!

ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



