பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 31 அன்று குஜராத் மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வரும் மார்ச் 31 அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரூ.5,295 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதாக, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகம் சனிக்கிழமை (மார்ச் 28) அன்று தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டங்களில், பிரதமர் மோடி ரூ. 3,427.14 மதிப்பிலான 26 புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதாகவும், நிறைவடைந்த ரூ. 1,868.40 கோடி மதிப்பிலான 18 பணிகளைத் திறந்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குஜராத்தின் முக்கிய பொருளாதார நகரமான அகமதாபாத்தில் மட்டும் ரூ.4,640 கோடி மதிப்பில் 32 வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
மேலும், காந்திநகரில் மாநகராட்சியின் கீழ் ரூ.305 கோடி மதிப்பிலான திட்டங்களும், நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் ரூ.273 கோடி மதிப்பிலான திட்டங்களும் தொடங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, கடந்த 2001 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
PM Modi will visit Gujarat on March 31.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

நெதர்லாந்து பிரதமருடன் பேசிய பிரதமா் மோடி!

பிரதமர் மோடி 100% டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்! -ராகுல் காந்தி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


