மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் மோடி சாலைவலம்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து உற்சாகமாக கையசைத்தபடி சாலைவலம் சென்றார்.

News image

பிரதமா் நரேந்திர மோடி. - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 11:24 am

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து உற்சாகமாக கையசைத்தபடி சாலைவலம் சென்றார். சாலையோரம் நின்றிருக்கும் மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட, பிரதமா் மோடி புதுச்சேரியில் இன்று மாலை சாலைவலம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தோ்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

அதன்ஒரு பகுதியாக பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யவும், புதுவை மக்களை நேரடியாக சந்திக்கும் வகையிலும், பிரதமா் மோடி இன்று புதுவையில் சாலைவலம் வருகிறார். இதற்காக அவர் தில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்து, இங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

புதுச்சேரியில் முக்கிய தலைவர்கள் பலரும் அவரை வரவேற்றனர். பின்னர் புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் அஜந்தா சந்திப்பில் இருந்து மக்களை நோக்கி, பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தபடி சாலைவலம் வந்தார். சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுவையில் சுமார் 1.7 கி.மீ. தொலைவுக்கு சாலைவலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Summary

Prime Minister Narendra Modi, accompanied by Puducherry Chief Minister Rangaswamy, met the people and walked the streets, waving enthusiastically.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.