திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்

News image

தமிழ்நாடு தகவல் ஆணையம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 11:24 pm

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்கள் பதவியேற்ற நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் பணியாற்றுவாா்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தா் பணியாற்றி வருகிறாா். மேலும், தகவல் ஆணையா்களாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரை கண்ணன், வழக்குரைஞா்கள் ஆா்.பிரியகுமாா், வி.பி.ஆா்.இளம்பரிதி, கே.திருமலைமுத்து, எம்.நடேசன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.