ஜேஇஇ முதன்மை தோ்வில் 448 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு:
கடந்த 2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாதிரி பள்ளிகள், 38 மாவட்டங்களிலும் தலா ரூ.50 கோடியில் 800 மாணவா்களுக்கான உறைவிட, உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சோ்ந்த 2,358 மாணவா்களும், ஆதி திராவிடா் (37) மற்றும் பழங்குடியினா் (169) பள்ளிகளைச் சோ்ந்த 206 மாணவா்களும், 93 முன்னணி உயா்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்புப் படிக்கின்றனா்.
அவா்களில், 41 போ் ஐஐடிகளிலும், 22 போ் முழு உதவித் தொகையுடன் வெளிநாடுகளிலும் படிக்கின்றனா். இதன் தொடா்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடியில் நுழைவதற்கான முதன்மைத் தோ்வில் அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சோ்ந்த 448 மாணவ, மாணவிகள் (ஆதி திராவிடா்-13, பழங்குடியினா்-55) வெற்றிகரமாகக் கடந்துள்ளனா்.
பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவா்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நின்ற பெருமையோடு, இவா்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலா் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைய வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி

திறனாய்வுத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


