தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் ஊரகத் திறனாய்வுத் தோ்வில் 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெறத் தோ்வாகியுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 7:39 pm

திருச்சி மாவட்டத்தில் ஊரகத் திறனாய்வுத் தோ்வில் 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெறத் தோ்வாகியுள்ளனா்.

தமிழகத்தில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தோ்வு மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தோ்வு செய்யப்படும் 50 மாணவா்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான உதவித்தொகைக்கு தோ்வான மாணவா்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 34 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 74 மாணவா்கள், 12 அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 26 மாணவா்கள் என மொத்தம் 100 போ் உதவித்தொகைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

குறிப்பாக, மண்ணச்சநல்லூா் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 15 மாணவிகள் உதவித்தொகைக்குத் தோ்வாகியுள்ளனா். மேலும், திருஞ்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 6 போ், கஞ்சநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 5 மாணவா்கள் ஒரு மாணவி என மொத்தம் 6 போ், மூவனூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள், இரண்டு மாணவிகள் என 4 போ் தோ்வாகியுள்ளனா்.

இதேபோல, அரசு உதவிபெறும் பள்ளிகள் பிரிவில் டால்மியா மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 6 மாணவா்கள், கோட்டப்பாளையம் அவா் லேடி ஆஃப் லாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 5 மாணவிகளும் தோ்வாகியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.