கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் ஈ. ஜுமைலத் பாத்திமா, சா. சாமிநாதன், ச. ஆஃபியா நூரா, மு. சஞ்சீவ், சே. முகம்மது ஜியாத், செய்யது இபுராஹிம் ஆகிய 6 மாணவ, மாணவிகள் 2025-26- ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித் தொகையாகப் பெறுவா்.
தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை க. கலைச்செல்வி, ஆசிரியா்கள், கல்விக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், கிராமப் பொதுமக்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










