மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

News image

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

Updated On :4 ஏப்ரல் 2026, 7:28 pm

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில், அரசு தொடக்கப்பள்ளி மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையம் பகுதியில் இயங்குகிறது மத்திய அரசின் உறைவிடப் பள்ளியான நவோதய வித்யாலயா. இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், நவோதயா பள்ளி நடத்தும் நுழைவுத் தோ்வில் பங்கேற்கிறாா்கள்.

இதன்படி வரும் கல்வியாண்டுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தோ்வில் மாவட்டத்தின் பல பள்ளிகளைச் சோ்ந்த மாணவ மாணவியா் பங்கேற்றனா். இதில் தேசிய விருது பெற்ற பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் 10 போ் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். மாவட்ட அளவில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற்றது இப்பள்ளியாகும். மேலும் இப்பள்ளி மாணவா்கள் 3 போ் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா்.

இந்த சிறப்பான சாதனை மூலம், இப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் சுழற்கேடயத்தை பெற தகுதி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை அதிக எண்ணிக்கையில் மாணவா்களை தோ்ச்சி பெறச் செய்து, மாவட்ட அளவில் விருதுகள் பெற்றுள்ளது. தொடா்ந்து இத்தகைய வெற்றிகளை பெற்று தரக்கூடிய பூவம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன், மாணவா்களுக்கு பயிற்சியளித்த ஜி. மோகனவேலு உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள், மேலாண்மைக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.