ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 செய்திகள், முக்கிய அறிவிப்புகள், விவாதங்கள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறியுங்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவை.

Published On :13 ஆகஸ்ட் 2026, 10:21 am IST
5:06 am, 12 ஆகஸ்ட் 2026

தொகுதி மறுவரையறை

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களை நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறு​வரையறை மசோதாவை மீண்​டும் கொண்​டுவர முயற்சிப்​ப​தாக தகவல்​ தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற சூழலில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்பிக்கள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களின் ஆதரவுடன் மசோதாவைத் தாக்கல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை (ஆக. 8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

4:04 am, 12 ஆகஸ்ட் 2026

தனித் தீர்மானம்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் விஜய்.

4:08 am, 12 ஆகஸ்ட் 2026

பெண்கள்தான் எல்லாம் - முதல்வர் விஜய்

எனக்கு இதற்கு முன்பும் இன்றும் இந்த இடம் கிடைக்க காரணம் பெண்கள்தான் என்பதை மறுக்க முடியாது என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.

5:05 am, 12 ஆகஸ்ட் 2026

தொகுதி மறுவரையறை: அதிமுக எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

5:07 am, 12 ஆகஸ்ட் 2026

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்: ஒரேயொரு பாஜக எம்.எல்.ஏ. எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு ஒரேயொரு பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.

5:39 am, 12 ஆகஸ்ட் 2026

தொகுதி மறுவரையறை தீர்மானத்துக்கு தேமுதிக எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்துக்கு தேமுதிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

6:11 am, 12 ஆகஸ்ட் 2026

திமுக ஆதரவு!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

6:21 am, 12 ஆகஸ்ட் 2026

தொகுதி மறுவரையறை: திமுக ஆதரவுடன் முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக, பாஜக,பாமக,தேமுதிக கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

6:59 am, 12 ஆகஸ்ட் 2026

நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்

மொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது என்றும் நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான் என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் தெரிவித்தார்.

7:07 am, 12 ஆகஸ்ட் 2026
7:38 am, 12 ஆகஸ்ட் 2026

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுன் கூறினார்.

7:39 am, 12 ஆகஸ்ட் 2026

குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் அமர்க்களம்

குட்டிக்கதை, சினிமா வசனம், எம்ஜிஆர் நடித்த பாடலுடன் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் பதிலுரையாற்றி வருகிறார்.

7:39 am, 12 ஆகஸ்ட் 2026

பேரவையில் பொய் சொல்லலாமா? கூடாதா? காரசார வாதம்

தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலுரை ஆற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், ஒரு குட்டிக்கதை சொல்ல அதில் பொய் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது குறித்து பேரவையில் காரசார வாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

9:01 am, 12 ஆகஸ்ட் 2026

யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார்! அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில்!

முதல்வர் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது என்று அமைச்சர் வினோத் கூறியதற்கு ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.