ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்: ஒரேயொரு பாஜக எம்.எல்.ஏ. எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு ஒரேயொரு பாஜக எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவித்ததைப் பற்றி...

முதல்வர் விஜய் - பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 11:53 am IST

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு ஒரேயொரு பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.

சமீபத்தில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இந்தத் தனித் தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், விசிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தனித்தீர்மானத்துக்கு எதிரான விவாதத்தில் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், “இந்த அளவுக்கு அவசரம் ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. தொகுதி மறுவரையறை மசோதா முன்வடிவு, பரிசீலனை காலகட்டத்தில்தான் இருக்கிறது.

ஆனால், மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம். மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பியதால்தான் நீங்கள் எல்லாம் சட்டப்பேரவையில் அமைச்சர்களாக இருக்கிறீர்கள்.

ஆனால், காலப்போக்கில் தேவையான, ஆக்கப்பூர்வமான மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 850 பேர் அமரக்கூடிய வகையில், நாடாளுமன்ற கட்டடம் கட்டியிருப்பதாக தளித் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறுகிறார்.

சகோதரர் ராமச்சந்திரன் அவருக்கு வீடு கட்டினால், அவருக்கும் அவரது மனைவிக்கும் மட்டும் கட்டமாட்டார். நாளை அவர்களது குழந்தைகள் எல்லாம் வருவார்கள். எதிர்காலத்தின் வளர்ச்சிக்காக இடித்து, இடித்து கட்ட முடியாது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி எது என்று கேட்டால் அனைவரும் பாஜக என்றுதான் கூறுவார்கள்.

வருங்காலத்தில் தேவைப்படும் என்பதற்காகவே நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. நிர்வாக வசதிக்காகவே கட்டடங்கள் கட்டப்படுகின்றன. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்கு தீங்கு வந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டுக்கு பிரச்சினை வந்தால் மத்திய அரசை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றலாம். இதனால், இந்தத் தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது” என்றார்.

Summary

Only one BJP MLA, Bhojarajan, opposed the special resolution on constituency delimitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.