ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பாஜக எம்எல்ஏவுக்கு நடந்த விபரீதம்!

கேரளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பாஜக எம்எல்ஏ முரளிதரன் காயமடைந்துள்ளது குறித்து...

BJP MLA V Muraleedharan

பாஜக எம்எல்ஏ முரளிதரன் - ENS

Published On :30 ஜூலை 2026, 4:42 pm IST

கேரளத்தில், துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துகையில் தராசு உடைந்ததால் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் முரளிதரன் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிக்காவு கோயிலில், நேற்று (ஜூலை 29) இரவு கேரள பாஜக மூத்த தலைவரும், கழுக்கூட்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வி முரளிதரன் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தராசில் தனது இடைக்கு நிகராக வாழைப்பழங்களைக் காணிக்கையாக அளித்து அவர் நேர்த்திக்கடன் செலுத்தியபோது தராசின் கயிறு அறுந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில், முரளிதரனின் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சடங்குகள் நிறுத்தப்பட்டு, உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதனால், காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின்பு முரளிதரன் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவியது.

Summary

BJP MLA Muralidharan was injured when the weighing scale broke during a *Thulabharam* ritual in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.