ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறை: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்யைப் பற்றி...

முதல்வர் விஜய்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:37 am IST

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் ச. ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களை நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறு​வரையறை மசோதாவை மீண்​டும் கொண்​டுவர முயற்சிப்​ப​தாக தகவல்​ தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற சூழலில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்பிக்கள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களின் ஆதரவுடன் மசோதாவைத் தாக்கல் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்க எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை (ஆக. 8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் அநீதி ஏற்படும். இதனால் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தற்போதுள்ள மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைத்திருப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான தொகுதிகளின் எண்ணிக்கைப் பகிா்வை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்கும் தேவையான உரிய சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும்.

பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்துவதில் மேலும் காலதாமதம் செய்யாமல், தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து 2029- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு அரசியலில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, அவா்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது சலுகை அல்ல. அது சமூக நீதி மற்றும் அரசமைப்பு வழங்கிய சமத்துவ உரிமையின் அடிப்படையிலானது.

2021- ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12 பெண் உறுப்பினா்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது. மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் போதுமான அளவில் உயரவில்லை.

பெண்களுக்கு அரசியலில் உரிய வாய்ப்பை வழங்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2023-இல் மக்களவை, அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முன்வந்துள்ளது. எனினும், இந்த இடஒதுக்கீடு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகே முழுமையாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அரசியலில் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனா். அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிா்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டாா்.

Chief Minister S. Joseph Vijay moved a special resolution in the Legislative Assembly calling for the number of Members of Parliament (MPs) to be fixed permanently at 543.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.