ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதி

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளதாகத் தகவல்...

C Joseph Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - TN Assembly

Published On :8 ஆகஸ்ட் 2026, 6:48 pm IST

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாஜக அரசு, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை கொண்டு வருவதற்கு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு எதிராக முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் புறக்கணித்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 57 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

இதில் தமிழகத்துக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

அதேபோல கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், "மக்கள் நலன்தான் முக்கியம். மக்கள் உணர்வுகளை என்றும் மதிப்போம். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளமாட்டோம். சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவோம்" என்று முதல்வர் விஜய் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Resolution against constituency delimitation in the Assembly: Chief Minister Vijay affirms

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.