ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறை: முதல்வர் விஜய்யின் அந்தர் பல்டி! திமுக, அதிமுக விமர்சனம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய்யை திமுக, அதிமுக விமர்சித்திருப்பது பற்றி...

CM Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:41 pm IST

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பல்டி அடித்திருப்பதாக திமுக மற்றும் அதிமுகவின் ஐடி விங்கள் விமர்சித்துள்ளன.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறையால் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

முதல்வர் விஜய்யின் நிலைப்பாட்டை விமர்சித்து திமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!

தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் காந்தி கூறியது இவரைத்தானா?

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?” எனக் குறிப்பிட்டுள்ளது.

அதிமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”திரைப்படங்களில் பல்டி அடிச்சி டான்ஸ் ஆடுவதில் பெயர் பெற்றவர் நம்ம நடிகர் விஜய் ப்ரோ.

அதையெல்லாம் மிஞ்சிய அந்தர் பல்டியை, தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் விஜய் ப்ரோ.

இப்போது நீங்கள் சொல்வதை தான் மத்திய அரசும் சொல்லியது, இதனால் தான் அஇஅதிமுக தொகுதி வரையறை மசோதா வந்தபோது ஆதரித்தது!

இப்படி பல்டி அடிப்பதற்கு எதற்கு ஒரு தீர்மான டிராமா?”

Summary

Constituency Delimitation: Chief Minister Vijay's U-turn - DMK and AIADMK Criticize!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.