ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? திமுக பதில்

முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியது பற்றி...

All-party meeting led by CM Vijay

முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் - PTI

Published On :8 ஆகஸ்ட் 2026, 4:34 pm IST

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாடு தெரியாமல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, "அவர்களின் கட்சி (தவெக) இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை அனைத்து எம்.பி.க்களும் எதிர்த்தபோது, நாங்களும் (திமுக) எதிர்த்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

தவெகவின் நிலைப்பாடு என்ன? ஆலோசனைக் கூட்டத்தில் நாம் என்ன விவாதிக்கப் போகிறோம்?

அவர்கள் பொதுவெளியில் வந்து தொகுதி மறுவரையறை எதிர்ப்பதாகக் கூறி, தமிழக எம்.பி.க்களுடன் நிற்பதாய் இருந்தால், அவர்கள் எங்களை அழைக்கலாம்.

தொகுதி மறுவரையறையில் அவர்களின் நிலைப்பாடு என்னவென்பது தெரியாமல், நாம் எப்படி அதில் பங்கேற்க முடியும்" என்று தெரிவித்தார்.

முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் 30 எம்.பி.க்களும், அதிமுகவின் 4 எம்.பி.க்களும், பாமக, தேமுதிக, மநீம கட்சிகளின் தலா ஒரு எம்.பி.யும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இருப்பினும், தவெகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

Summary

Why did the DMK not participate in the consultative meeting led by CM Vijay?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.