ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொகுதி மறுவரையறை சட்ட முன்மொழிவே இல்லாதபோது எதன் அடிப்படையில் தனித் தீர்மானம்? தேமுதிக

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்துக்கு தேமுதிக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை...

DMDK opposes the resolution on constituency delimitation

பிரேமலதா விஜயகாந்த் - TN

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:04 pm IST

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்துக்கு தேமுதிக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார்.

பேரவையில் இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளரும் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு சட்ட முன்மொழிவு இன்னும் கொண்டுவரவில்லை. அப்படி இருக்க இந்த தனித் தீர்மானம் எந்த அடிப்படையில் சரியாக இருக்கும்.

மக்கள்தொகை அடிப்படையில் இந்த தொகுதி மறுவரையறை நடக்கிறது என்று நினைத்தால், பல்வேறு மாநிலங்களில் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை சரிசமமாக உயரும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும்.

தொகுதி மறுவரையறை மூலமாக, 543 எம்பிக்கள் உள்ள நிலையில் 815 எம்பிக்கள் வாய்ப்பு இருக்கும். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 59 எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் இருக்கிறார், இந்த தொகுதி மறுவரையறை மூலமாக 7 - 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. கிடைப்பார். இதனால் மக்கள் பிரச்னைகளை அதிகம் பேச முடியும்.

ஒரு பெண் அவை உறுப்பினராக 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன். இதே பேரவையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 33% இடஒதுக்கீடுக்காக பெண்களுக்காக மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தியவர். இந்த அவையிலும் பெண்கள் அதிகமாக இருப்பதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

தற்போது 543 இடங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவின் அடிப்படையில் 113 பெண்கள் இருக்க வேண்டும். 815 எம்.பி.க்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் 215 பெண் எம்.பி.க்கள் கிடைப்பார்கள்" என்று கூறினார்.

Summary

DMDK opposes the resolution on constituency delimitation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.