ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார்! அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில்!

பேரவையில் அமைச்சர் வினோத் கூறியதற்கு ஓ. பன்னீர்செல்வம் பதில்...

agriculture minister vinoth vs DMK MLA O panneerselvam

அமைச்சர் வினோத் | ஓ. பன்னீர்செல்வம் - TN

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:28 pm IST

முதல்வர் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது என்று அமைச்சர் வினோத் கூறியதற்கு ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று பேரவையில் வேளாண் துறை பட்ஜெட் மீது பதிலுரை அளித்தார். வேளாண் பட்ஜெட்டை விவசாயிகள் வரவேற்கிறார்கள் என்றும் சிலர் தூண்டுதலின் பேரில் வேளாண் பட்ஜெட்டை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வரும் காலங்களில் நீங்கள் மாற்றத்தை உணர முடியும் என்றும் தெரிவித்தார்.

அப்போது, எங்கள் முதல்வர் யார் தெரியுமா? என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டியபோது இறுதியாக, "அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் (முதல்வர் விஜய்) வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது" என்று கூறினார்.

அப்போது முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ. பன்னீர்செல்வம், "இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார் என்பதைக் கூறிக்கொள்கிறேன். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சித்தும் சூரியனுக்கு ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்" என்றார்.

Summary

Agriculture minister vinoth vs DMK MLA O panneerselvam in TN Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.