திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு ரத்து

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 6:02 am IST

அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையான திமுக ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவா் ஐ.பெரியசாமி. அப்போது, விருப்ப உரிமை அடிப்படையில் பலருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், பலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில், ஐ.பெரியசாமி உள்பட 7 போ் மீது அமலாக்கத் துறை பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அமைச்சா் ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முத்து கணேசபாண்டியன், ‘விருப்ப உரிமை அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கியதில் குற்றச்சதியோ, அரசுக்கு நிதி இழப்போ இல்லை என சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புகளில் கூறியுள்ளன.

இதுகுறித்து ஊழல் தடுப்புத்துறை தாக்கல் செய்த வழக்கும் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே, அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.