பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து

இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 9:24 pm

இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய தொல். திருமாவளவன் இந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெறுப்பு கருத்துகளைக் கூறியதாக ஹிந்து முன்னணி பொதுச் செயலா் டி.என்.கண்ணன் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி ஒதியஞ்சோலை போலீஸாா் தொல்.திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்தனா். புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொல்.திருமாவளவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்.திருமாவளவன் தரப்பில், மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆறு ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தொல்.திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.