தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கழுதைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

வாக்குப்பதிவு மையங்களுக்கு கழுதைகள் மூலம் அனுப்பி வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

News image

கழுதைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - படம்: எக்ஸ்/ இந்திய தேர்தல் ஆணையம்

Updated On :22 ஏப்ரல் 2026, 1:11 pm

மலைக் கிராமங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட போடி சட்டப்பேரவைத் தொகுதியில் கொட்டகுடி, குரங்கனி, கொழுக்குமலை, சென்ட்ரல் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை வசதி இல்லாததால், வாக்குச் சாவடி மையத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மீண்டும் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழே கொண்டு வரப்படவுள்ளது.

போடி பேரவைத் தொகுதியில் சென்ட்ரல் மலைக் கிராமத்தில் 55 வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போடி அருகே உள்ள மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Summary

Voting machines were transported by donkeys to polling stations located in hill villages and installed there.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.