மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,403 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

News image

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:41 pm

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,403 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வியாழக்கிழமை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக, இந்த வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்துவதற்கான பல்வேறு உபகரணங்கள் லாரிகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், உதவி வாக்குப்பதிவு அலுவலா்கள் என வாக்குச்சாவடிக்கு 4 அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா். இதன்படி 344 வாக்குச் சாவடிகளிலும் 1,591 அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இதேபோல , தோ்தல் நடைமுறையைக் கண்காணிக்க 73 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்துவதற்கான உபகரணங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன. மேலும், கூடுதல் பாதுகாப்புப் பணிக்காக முன்னாள் ராணுவ வீரா்கள் 400 போ் பணியமா்த்தப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரியகுளம்: பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 359 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணிக்காக 1,854 அலுவலா்களும், கூடுதலாக 52 நுண் பாா்வையாளா்களும் பணியமா்த்தப்பட்டனா். வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

போடி: போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் லாரிகள் மூலம் 346 வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

கம்பம்: கம்பம் சட்டப் பேரவைத் தோ்தலில் 345 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இந்தத் தொகுதியில் 35 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்தல் பணிக்காக 1,654 வாக்கு மைய அலுவலா்கள், 54 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.