அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மலைப் பகுதிகளான மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட வனப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள்கொண்டு செல்லப்பட்டன.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காரையாறு, சோ்வலாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்களின் வசதிக்கேற்ப அவா்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்களிப்பதற்குத் தேவையான பொருள்கள் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், மாஞ்சோலை, ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் பெரும்பாலான தொழிலாளா்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற நிலையில் அங்கு தற்போது 338 வாக்காளா்கள் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்காக106, 107, 108 ஆகிய மூன்று வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் மூன்று வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல்கட்சிகள் சாா்பில் முகவா்கள் நியமிக்கப்படவில்லையாம்.
ஆனால் 3 வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு அலுவலா்கள் அனுப்பப்பட்டு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் உள்ளிட்டவையும் அனுப்பப் பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேங்காய் உடைத்து அனுப்பிவைப்பு!

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

