தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முக்கிய ஜவுளி நிறுவனங்களின் அலுவலகங்கள், கிளைகள் மற்றும் உரிமையாளா்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பரிவா்த்தனை முறைகேடு போன்ற புகாா்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, கரூா், கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகவும், சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



