திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

திருக்குவளையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம்,  திருக்குவளை அஞ்சுகம் முத்துவேல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:50 am

DIN

திருக்குவளை: நாகப்பட்டினம் மாவட்டம்,  திருக்குவளை அஞ்சுகம் முத்துவேல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு திருக்குறளை ஊராட்சி  தலைவர் இல.பழனியப்பன் தலைமை வகித்தார். கீழையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எஸ்.வெற்றிச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து  விளக்கமளிக்கப்பட்டது. ‌

இம்முகாமில் மாவட்ட‌ தொழில் மையத்தின் பொதுமேலாளர் இரா.ரமணி பங்கேற்று  சுயதொழில் தொடங்க கடன் வழங்கல் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதும், எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் அதுதொடர்பான பயிற்சி குறித்து விளக்கமளித்து பேசினார்.

இம்முகாமில் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த், உதவி பொறியாளர் மு.அஜெய்விக்னேஷ்வர்,தொழில் கூட்டுறவு அலுவலர் கோ.கோமகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் இளைஞர்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.