மாடித் தோட்டம் அமைக்க ஊக்குவிப்பு: ஆன்லைன் போட்டி அறிவித்து பேரூராட்சி நிர்வாகம் புதுமை!
மாடித் தோட்டம் அமைத்திட ஊக்குவிக்கும் வகையில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் ஆன்லைன் போட்டி அறிவித்து புதுமையை நிகழ்த்தியுள்ளது.


'ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கு ஏற்ப, மாடித் தோட்டம் அமைத்திட ஊக்குவிக்கும் வகையில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் ஆன்லைன் போட்டி அறிவித்து புதுமையை நிகழ்த்தியுள்ளது.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் கரோனா பொதுமுடக்கம் அறிவித்தபோது அரசு உத்தரவுப்படி மக்களை வீட்டிலேயே இருக்கும் வகையில் ஆரோக்கிய சமையல் போட்டிகளை அறிவித்தது.
வீட்டிலேயே சத்தான சமையல் செய்து அதனை பேரூராட்சி செயல் அலுவலருக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து சிறந்த சமையலுக்கு தினந்தோறும் பரிசுகளை வழங்கினார். அதன்படி, தற்போது நகர்ப்பகுதி மக்களின் விவசாய ஆர்வத்தை வெளிகொணரவும், இளைஞர்களிடம் விவசாயத்தை எடுத்துச் செல்லவும் நூதனமான முறையில் யோசித்து மாடித் தோட்டம் அமைத்து பரிசு பெறும் 'ஆடிப் பட்டம் தேடி விதை; எங்கள் வீட்டுத் தோட்டம்' என்ற புதுமையான ஆன்லைன் போட்டியை அறிவித்துள்ளது.
பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைத்து மரபணு மாற்றம் செய்யப்படாத நாட்டுக் காய்கறி வகைகள் பயிரிட விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது. காய்கறித் தோட்டம் மட்டுமல்லாமல் நோய் தீர்க்கும் பாரம்பரிய மூலிகைகள் தோட்டம், நறுமணம் வீசும் பூந்தோட்டமும் தங்களது வீட்டின் பின்புறம் அமைக்கலாம். மேலும் நகர்ப்பகுதியில் இடமே இல்லாதவர்கள் கூட மாடித்தோட்டம் அமைக்கலாம் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொது மக்கள் தோட்டம் அமைத்து படங்களை ஆன்லைனில் அனுப்பினால் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் பரிசாக வீடு தேடி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுமையான போட்டி குறித்து வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்ததாவது:
இந்த பொது முடக்க காலத்தில் பொது மக்களின் மன அழுத்தம் போக்க இயற்கையின் பக்கம் அவர்களின் நேரத்தை செலவிட வைத்து அவர்களின் உடல் மற்றும் மனதினை ஆரோக்கியப் பாதையில் பயணிக்க வைக்கவும், பாரம்பரிய நாட்டுக் காய்கறிகள் மற்றும் மருத்துவ மூலிகைகளை மீட்டெடுக்கவும் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரூராட்சியில் மக்கும் குப்பையிலிருந்து அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் இயற்கை உரத்தினை எதிர்காலத்தில் சந்தைப்படுத்த மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்றார்.
இந்த ஆன்லைன் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பேரூராட்சி பகுதியில் பலர் தங்களது வீட்டின் பின்புறம் மற்றும் மாடித் தோட்டங்களை அமைத்து பரிசு பெற முனைப்பு காட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...