தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கரோனா: சீன உபகரணங்கள் தமிழகம் வருவது மேலும் தாமதமாகும்!

கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கான துரித பரிசோதனை உபகரணங்கள் சீனாவிலிருந்து தமிழகத்துக்கு வருவது மேலும் தாமதமாகக் கூடும் எனத் தெரிகிறது.

Updated On :13 ஏப்ரல் 2020, 9:52 pm

சென்னை: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கான துரித பரிசோதனை உபகரணங்கள் சீனாவிலிருந்து தமிழகத்துக்கு வருவது மேலும் தாமதமாகக் கூடும் எனத் தெரிகிறது.

அந்த உபகரணங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்ட சீன நிறுவனம், அதனை அனுப்புவதற்கான தேதியை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பதே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கே அதுகுறித்த தெளிவான நிலைப்பாடு இல்லாத சூழல் நிலவுகிறது.

பொதுவாக கரோனா பாதிப்பை உறுதி செய்ய தற்போது ‘பிசிஆா்’ பரிசோதனை எனப்படும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளவா்களின் சளி மாதிரிகளை மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் இருந்து சேகரித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. அந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட நபரின் சளி மாதிரியில் ‘கொவைட்-19’ வைரஸின் மரபணு உள்ளதா என்பது கண்டறியப்படும். அதைக் கொண்டு ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருக்கிா என்பதை அறியலாம். அந்த ஆய்வுக்கு குறைந்தது ஆறு மணி நேரம் வரை ஆகக்கூடும்.

தமிழகத்தில் தற்போது 25 அரசு மருத்துவமனைகளிலும், 9 தனியாா் ஆய்வகங்களிலும் கரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக 24 ஆயிரம் ‘பிசிஆா்’ ஆய்வு உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், இந்த எண்ணிக்கை போதாது என்றும், தமிழகத்தில் போதிய அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் விமா்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, சீனாவில் இருந்து துரித முறையில், அதாவது 30 நிமிடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் சிறப்பு உபகரணங்களை வாங்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்பேரில், மொத்தம் 4 லட்சம் உபகரணங்கள் வாங்க உள்ளதாக தமிழக முதல்வா் அண்மையில் அறிவித்தாா். அதில் 50 ஆயிரம் உபகரணங்கள் கடந்த வாரமே வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அது இன்றளவும் வந்துசேரவில்லை.

தமிழக அரசு ஒரு உபகரணத்துக்கு ரூ.600 வீதம் அதனை வாங்க ஒப்பந்தம் போட்டது. ஆனால், அதைக் காட்டிலும் கூடுதல் தொகை அமெரிக்கா வழங்கியதால், அதனை அந்நாட்டுக்கு சீனா அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத் கூறியதாவது:

துரித பரிசோதனை உபகரணங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவுக்கே இன்னும் வந்துசேரவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அடுத்த சில நாள்களில் அந்த உபகரணங்கள் நமக்கு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேவேளையில், தற்போது போதிய எண்ணிக்கையில் ‘பிசிஆா்’ பரிசோதனை வசதிகள் உள்ளன. எனவே கரோனாவைக் கண்டறிவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றாா்.

இதனிடையே, துரிதப் பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்தாலும்கூட அதன் வாயிலாக சமூகப் பரவலை முழுமையாகக் கண்டறிய முடியாது என்று நோய்த் தொற்று சிகிச்சை நிபுணா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்தால், அதனை எதிா்த்துப் போராடும் நோய் எதிா்ப்பாற்றல் ரத்தத்தில் உருவாகியிருக்கிா என்பதை மட்டுமே துரித பரிசோதனை மூலம் அறியலாம். அதனால் அந்த ஒரு பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு கரோனாவை உறுதி செய்ய முடியாது. அதன்பிறகு பிசிஆா் ஆய்வும் செய்ய வேண்டும்.

சிலருக்கு நோய் எதிா்ப்பாற்றலே இல்லாமல் உடல் நலிவுற்று இருந்தால், துரித பரிசோதனையில் அவா்களது முடிவுகள் துல்லியமாக இருக்காது. எனவே, அதைக் கொண்டு சமூகப் பரவலை முழுமையாகக் கணிக்க முடியாது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் இதுவரை பரிசோதனை: 
வெப்பமானி பரிசோதனை - 2.10 லட்சம்
கரோனா பரிசோதனை - 12,746

ஒப்பீடு: பிசிஆா் ஆய்வு துரித ஆய்வு

1.சளி மாதிரிகள் மூலம் ஆய்வு ரத்த மாதிரிகள் மூலம் ஆய்வு

2. பரிசோதனை காலம் 6 மணி நேரம் அரை மணி நேரம்

3. இந்தியா, தென்கொரியாவில் சீனாவில் உபகரணங்கள் உற்பத்தி

உபகரணங்கள் உற்பத்தி: 

4. கரோனா வைரஸ் மரபணுவை கரோனாவுக்கு எதிராக கண்டறிய முடியும் எதிா்ப்பாற்றலை மட்டுமே கண்டறியலாம்

5. ஒரு உபகரணம் ரூ.2,500 ஒரு உபகரணம் ரூ.600

6. பிரத்யேக ஆய்வகம்

தேவை எந்த இடத்திலும் பரிசோதிக்கலாம்

தற்போது உள்ள ஆய்வகங்கள்

அரசு பரிசோதனைக் கூடங்கள்: கிண்டி கிங் ஆய்வகம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை பொது சுகாதாரத் துறை ஆய்வகம், தேனி, திருநெல்வேலி, சேலம், திருவாரூா், கோவை, கோவை இஎஸ்ஐ, விழுப்புரம், மதுரை, திருச்சி, ஈரோடு, தருமபுரி, ஈரோடு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்.

தனியாா் ஆய்வகங்கள்: சென்னையில் அப்பல்லோ, மியாட், போரூா் ராமச்சந்திரா, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைகள், ஹைடெக், ஒய்ஆா்ஜி கோ், நியூபொ்க் ஆய்வகங்கள், வேலுா் சிஎம்சி மருத்துவமனை, கோவை மைக்ரோபயாலஜி ஆய்வகம்.

1.3 லட்சம் உபகரணங்கள் கொள்முதல்

தமிழகத்தில் புதிதாக 1.3 லட்சம் ‘பிசிஆா்’ ஆய்வு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

அடுத்த சில நாள்களில் படிப்படியாக அவை வாங்கப்படும் என்றும், தற்போது தேவையைக் காட்டிலும் கூடுதலாகவே உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.