தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

போக்குவரத்து நெரிசலில் திணறும் பண்ருட்டி நகரம்

பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டி நகரில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் இல்லாததும், ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:24 am

பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டி நகரில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் இல்லாததும், சாலை ஆக்கிரமிப்புகளுமே நெரிசலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

வியாபார நிலையமான பண்ருட்டியில் நாள்தோறும் போக்குவரத்து பெருகி வருகிறது. கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி நகரின் வழியாக செல்கிறது. இவ்விரு சாலைகளும் நான்கு முனை சந்திப்பை கடந்து செல்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நான்கு திசைகளிலும் சென்று வருகின்றன.

விழுப்புரம்-மயிலாடுதுறை இடையிலான ரயில்வே பாதை பண்ருட்டியில் தஞ்சாவூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து செல்கிறது. இவ்வழியாக ரயில்கள் கடந்து செல்லும்போது, கேட் மூடப்படுவதால் சென்னை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்ருட்டி நான்கு முனை சந்திப்பையும் தாண்டி வாகனங்கள் நிற்பதால், அனேக சமயங்களில் இதன் பாதிப்பு கடலூர்-சித்தூர் சாலையிலும் எதிரொலிக்கிறது.

சென்னை சாலையில் நான்கு முனை சந்திப்பு அருகே காய்கறி கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்குவதாலும், காய்கறி வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து மொத்த வியாபாரம் செய்வதாலும், சிறு வியாபாரிகள் கடைகளை சாலையிலேயே போட்டு விற்பனை செய்வதாலும் சாலை குறுகி அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடக்கின்றன.

சாலையில் வாகனங்கள் நிறுத்துவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும், அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்டாலும் சென்னை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், தடையும் ஏற்படுகிறது.

மாற்றுவழி பாதை: பண்ருட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நகர நிர்வாகம் மாற்று வழியில் வாகனங்களை திருப்பிவிட்டுள்ளது. மேலும் மாற்றுவழிப் பாதையும் அமைத்து வருகிறது.

இருப்பினும் நகரின் முக்கிய சாலைகளில் குறிப்பாக சென்னை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், நடைபாதை கடைகளையும் அகற்றி தடை மற்றும் விபத்தில்லா போக்குவரத்துக்கு நகர நிர்வாகம் மற்றும் காவல்துறை வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.