ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா கால்பந்துத் தொடரில் தொடர் நாயகன் விருதை பயர்ன் மியூனிக்கின் ரைட் விங்கரும் அட்டாக்கிங் மிட் ஃபீல்டருமான மைக்கேல் ஒலிசி பெற்றார்.
இந்த சீசனில் ஹாரி கேன் அதிக கோல்கள் (36) அடித்திருந்தாலும் மைக்கேல் ஒலிசி தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா சாம்பியன்ஷிப்பை பயர்ன் மியூனிக் அணி தக்கவைத்தது. இத்துடன் 34 முறை புன்டெஸ்லீகாவில் கோப்பை வென்றுள்ளது.
இந்த சீசனில் பயர்ன் மியூனிக் மொத்தமாக 122 கோல்கள் அடித்திருந்தார். முந்தைய சீசனில் 101 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
கிரிஸ்டல் பேலஸ் அணியிலிருந்து 2024ல் பயர்ன் மியூனிக் அணியில் இணைந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ஃபிஃபா உலகக் கோப்பையிலும் தேர்வாகியுள்ளார்.
இந்த சீசனில் மைக்கேல் ஒலிசி 15 கோல்கள், 19 அசிஸ்ட்டுகள், 32 மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கி அசத்தினார். இந்தக் காரணத்தினால் இவர் தொடர் நாயகனாகத் தேர்வாகியுள்ளார்.
Summary
Michael Olise has been crowned as Bundesliga Player of the Season
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் கோப்பை வென்ற விராட் கோலிக்கு கால்பந்து வீரர் ஹாரி கேன் வாழ்த்து!

நான் 100% பந்துவீச்சாளர், 100% பேட்டர்..! ஆட்ட நாயகன் விருது வென்ற மாதவ் திவாரி!

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!

9 கோல்களை தடுத்த 40 வயது கோல்கீப்பர்: ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பயர்ன் மியூனிக்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



