சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியின் முதல்கட்ட ஆட்டத்தில் ஜாம்பவான் ரியல் மாட்ரிட் அணிக்கு ஜெர்மனி ஜெயண்ட்ஸ் என அழைக்கப்படும் பயர்ன் மியூனிக் அதிர்ச்சி அளித்துள்ளது.
ரியல் மாட்ரிட் தனது சொந்த மண்ணில் பயர்ன் மியூனிக் உடன் நள்ளிரவு ஆட்டத்தில் மோதியது. இந்தப் போட்டியில் 1-2 என பயர்ன் மியூனிக் வென்றது.
இந்தப் போட்டியில் 41, 46ஆவது நிமிஷத்தில் பயர்ன் மியூனிக் சார்பாக லூயிஸ் டைஸ், ஹாரி கேன் கோல் அடித்தார்கள். 74ஆவது நிமிஷத்தில் கிளியன் எம்பாப்வே கோல் அடித்தார்.
இந்தப் போட்டியில் 52 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த பயர்ன் மியூனிக் இலக்கை நோக்கி 4 முறை மட்டுமே அடித்தது. ஆனால், ரியல் மாட்ரிட் அணி 10 முறை அடித்தது.
பயர்ன் மியூனிக் அணியின் கோல்கீப்பர் மானுவல் பீட்டர் நியூயர் 9 முறை தடுத்து அசத்தினார். 40 வயதான இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட போட்டியில் ரியல் மாட்ரிட் கம்பேக் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary
40-Year-Old Goalkeeper Saves 9 Shots: Bayern Munich Shocks Real Madrid!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!

96 வயதில் காலமான ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்டரி வீரர்!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

70 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்..! புஸ்கஸ் விருது கிடைக்குமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



