மியாமி ஓபன் ஆடவர் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னர் 6-4, 6-4 என்ற செட்களில் வென்று கோப்பையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலமாக ’சன்ஷைன் டபுள்’ என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
முன்னதாக, மகளிர் பிரிவிலும் இதேபோல முதல்முறையாக அரினா சபலென்கா ’சன்ஷைன் டபுள்’ என்ற சாதனையைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா மற்றும் இத்தாலி நாட்டின் யானிக் சின்னரும் மோதினார்கள். இந்தப் போட்டியில் சின்னர் 6-4, 6-4 என வெற்றியடைந்தார்.
கடைசியாக சன்ஷைன் டபுள் ஆடவர் பிரிவில் 2017ல் ரோஜர் ஃபெடரர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு தொடரிலும் ஒரு செட் கூட இழக்காமல் இந்த சாதனையை செய்துள்ள ஒரே ஆடவராக சின்னர் வரலாறு படைத்துள்ளார்.
சின்னருக்கு இது இரண்டாவது மியாமி ஓபன் பட்டமென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஆடவர், மகளிர் பிரிவில் நோவக் ஜோகோவிச், விக்டோரியா அஜரென்கா சன்ஷைன் டபுள் வென்றிருந்தார்கள். தற்போது இந்தாண்டு சின்னர், சபலென்கா வென்றுள்ளார்கள்.
Summary
Sinner follows Sabalenka's lead with a 'Sunshine Double,' beating Lehecka in Miami Open final.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!

இன்டர் மியாமியின் புதிய திடலில் கோல் அடித்த மெஸ்ஸி..! 5 போட்டிகளிலும் தோல்வியுறாமல் ஆதிக்கம்!

மியாமி ஓபனில் பட்டம்: சன்ஷைன் டபுள் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த சபலென்கா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


