புதிய திடலில் முதல் போட்டியில் விளையாடிய இன்டர் மியாமி அணி ஆஸ்டின் எஃப்சி உடன் 2-2 என சமனில் முடிந்தது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தனது முதல் கோலை 10ஆவது நிமிஷத்தில் அடித்து அசத்தினார்.
நடப்பு சாம்பியனாக இருக்கும் இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் புதியதாகக் கட்டிக்கொண்டிருக்கும் ’நு திடலில்’ போட்டியில் 2-2 என சமநிலையில் முடித்துள்ளது.
இந்தத் திடலில் மெஸ்ஸிக்கு என்று பார்வையாளர் மாடமும் திறக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் 1-1 என சமநிலையில் இருக்க, இரண்டாம் பாதியில் ஆஸ்டின் அணி 53ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-1 என முன்னிலை வகித்தது.
லூயிஸ் சௌரஸ் 82ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் கிடைத்த பந்தினை தரையில் படாமல் வலைக்குள் உதைத்து அசத்தினார். இதனால், ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது.
ஃபிரி கிக்கில் மெஸ்ஸி அடித்த பந்தினை சுவாரஸ் கோலாக மாற்ற முயற்சித்தார். அது ஆஃப்ஸைடு விதியினால் நடுவரின் மூலம் புறக்கணிக்கப்பட்டது.
எம்எல்எஸ் தொடரின் புள்ளிப் பட்டியலில் நாஸ்வில்லி 13 புள்ளிகளுடன் முதலிடத்திலும் 3 அணிகள் 11 புள்ளிகளுடன் இருக்கின்றன. இன்டர் மியாமியும் 11 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது.
நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி கடந்த போட்டிகளில் தோல்வியே காணமல் முன்னேறி வருகிறது. அதற்கு மாறாக, கடந்த 4 போட்டிகளில் வெற்றியே காணாமல் வருகிறது.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 61 சதவிகித பந்தினை தன்வசம் வைத்திருந்து, 90 சதவிகித துல்லியத்துடன் பந்தை பாஸ் செய்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Messi scores, but Inter Miami only gets 2-2 tie with Austin FC in opener of new stadium.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!

மியாமி ஓபனில் பட்டம்..! சன்ஷைன் டபுள் சாதனையும் படைத்த சின்னர்!

அதிவேகமாக 900 கோல்கள்..! மெஸ்ஸி உலக சாதனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



