அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணியும் ரெட் புல் அணியும் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் 17 வயதான அட்ரி மெஹ்மெட்டி கோல் அடித்து அசத்தினார். முன்னதாக, 2009ல் ஏப்.8ஆம் தேதி மெஸ்ஸி சாம்பியன்ஸ் லீக்கில் 2 கோல்கள் அடிப்பர். அதற்குப் பிறகு 2 நாள்கள் கழித்து பிறந்தவர்தான் அட்ரி மெஹ்மெட்டி. அவர்தான் இப்போது கோல் அடித்துள்ளார்.
இன்டர் மியாமி தனது சொந்த மண்ணில் நியூ யார்க் ரெட் புல்ஸ் அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியில் 2-2 என சமனில் முடிந்தது. ரெட் புல்ஸ் அணியில் 18 வயதான ஜூலியன் ஹால் 2 அசிஸ்ட் செய்து அசத்தினார்.
இன்டர் மியாமி அணியில் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜெர்மன் பெர்டெராமே (27 வயது) , மதியோ சில்வெட்டி (20 வயது) கோல் அடித்து அசத்தினார்கள். இந்தப் போட்டியில் 38 வயதான லியோ மெஸ்ஸி 1 அசிஸ்ட் செய்தார்.
இன்டர் மியாமி அணி கடைசி 6 போட்டிகளில் தோல்வியே காணாமல் இருந்து வருகிறது. இதில் 3 வெற்றிகள், 3 சமனில் முடிந்துள்ளன. இந்தப் போட்டிக்குப் பிறகு 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் 60 சதவிகித பந்தை தனது கட்டுக்குள் வைத்திருந்த இன்டர் மியாமி அணி இலக்கை நோக்கி 5 முறை அடித்தது. ரெட் புல்ஸ் அணியின் கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.
போட்டியின் கடைசி நேரத்தில் (94ஆவது நிமிஷம்) 25 அடி தூரத்தில் மெஸ்ஸிக்கு கிடைத்த ஃபிரி கிக் ரெட் புல்ஸ் அணியின் கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது.
நாஸ்வில்லி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும் சிகாகோ 13 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இன்டர் மியாமி 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கின்றன.
Summary
Messi and Inter Miami get 2-2 tie with Red Bulls, after 17-year-old Mehmeti scores late.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

3-ஆவது ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி..! உலகக் கோப்பைக்குத் தயார்!

அதிவேகமாக 100 கோல்கள் பங்களிப்பு..! மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை!

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



