இன்டர் மியாமிக்கான போட்டியில் விளையாடும்போது கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு தொடைத் தசையில் காயம் ஏற்பட்டது.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோ மெஸ்ஸி (38 வயது) இன்டர் மியாமி கிளப் அணியில் 2023 முதல் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அந்த அணி முதல்முறையாக மெஸ்ஸி தலைமையில் எம்எல்எஸ் கோப்பையை வென்றது.
நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடிவரும் இன்டர் மியாமி அணி உலகக் கோப்பைக்கு முன்பாக தனது கடைசி ஆட்டத்தில் பிலடெல்ஃபியாவுடன் நேற்று மோதியது.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 6-4 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்த மெஸ்ஸி 73ஆவது நிமிஷத்தில் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் வெளியேறினார்.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11ல் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயம் ஆர்ஜென்டீன ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் மெஸ்ஸிக்கு இடது தொடையில் அதிக வேலைப்பாட்டினால் தசையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து குணமாக அவரது மருத்துவ, செயல்முறை சார்ந்த முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என இண்டர் மியாமி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்பாக ஆர்ஜென்டீனா நட்பு ரீதியான போட்டியில் ஜூன் 6ல் ஹொண்டுராஸ் உடனும் ஜூன் 9ல் ஐஸ்லாந்துடன் விளையாடவிருக்கிறது.
ஆர்ஜென்டீனா தனது குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் ஜூன் 16ல் அல்ஜீரியாவுடனும், ஜூன் 22ல் ஆஸ்திரியாவுடனும், ஜூன் 27ல் ஜோர்டானுடனும் விளையாடுகின்றன.
இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ள மெஸ்ஸி இரண்டு முறை (2014, 2022) தங்கப் பந்து விருதை வென்றுள்ளார். இந்த விருதை அதிகமுறை வென்ற வீரராகவும் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Inter Miami says Lionel Messi has ''an overload'' associated with fatigue in left hamstring
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










