பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலென்கா (27 வயது) மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது இரண்டாவது பட்டத்தை வென்றார்.
கடந்தாண்டு நடைபெற்ற மியாமி இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவுடன் மோதி 7-5, 6-2 என்ற செட்களில் வென்றிருந்தார்.
மியாமி ஓபன் மகளிர் இறுதிப் போட்டியில் கோகோ கௌஃப் மற்றும் அரினா சபலென்கா மோதினார்கள். இந்தப் போட்டியில் சபலென்கா 6-2, 4-6, 6-3 என்ற செட்களில் வென்றார்கள்.
இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபனில் பட்டம் வெல்பவர்களுக்கு 'சன்ஷைன் டபுள்’ விருது அளிக்கப்படும். இகா ஸ்வியாடெக் கடந்த 2022ல் இந்த விருதை வென்றிருந்தார். இவருக்குப் பிறகு சபலென்கா இந்த விருதைப் பெறுகிறார்.
ஒட்டுமொத்தமாக பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் அரினா சபலென்கா ஐந்தாவது வீராங்கனையாக இந்த சன்ஷைன் டபுள் என்ற அடையாளப் பெருமையைப் பெற்றுள்ளார்.
டென்னிஸ் காலண்டரின் தொடக்கத்தில் தலா 1,000 புள்ளிகள் கொண்ட முதலிரு போட்டிகளாக இண்டியன் வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன் உள்ளன. இந்த இரு போட்டிகளிலுமே சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ‘சன்ஷைன் டபுள்’ என்ற அடையாளப் பெருமை கிடைக்கிறது.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடைபெறும் இரு போட்டிகளிலுமே மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டிலும் சாம்பியனாவதே இதில் இருக்கும் முதல் சவாலாகும். இதுதவிர, ஆடுகளச் சூழல் ரீதியான சவாலும் உள்ளது.
வட வானிலையுடன், பாலைவனக் காற்று வீசும் இண்டியன் வெல்ஸ் ஓபனில் பந்து வேகமாக வருவதுடன், அதிகமாக பௌன்ஸ் ஆகும். அதுவே, கடல் மட்டத்தில், காற்றில் அதிகமான ஈரப்பதம் இருக்கும் மியாமி ஓபனில், பந்து சற்று மெதுவாக வருவதுடன் கனமாக உணரப்படுவதால், தரையிலிருந்து குறைந்த உயரமே எழும்பும் என்பதும் சவாலானது.
Summary
Aryna Sabalenka beats Coco Gauff in the Miami Open final to complete the Sunshine Double
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!

மியாமி ஓபனில் பட்டம்..! சன்ஷைன் டபுள் சாதனையும் படைத்த சின்னர்!
இறுதியில் சபலென்கா - கௌஃப் பலப்பரீட்சை

இண்டியன் வெல்ஸ்: முதல்முறையாக பட்டம் வென்ற சின்னர், சபலென்கா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


