மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உலகக் கோப்பை: காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகருக்கு விசா மறுப்பு!

விசா மறுக்கப்பட்ட காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகர் குறித்து...

News image

காங்கோ கால்பந்து அணியின் ரசிகர். - படங்கள்: ஏபி

Updated On :2 ஏப்ரல் 2026, 10:13 am

காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகருக்கு உலகக் கோப்பையைப் பார்க்க விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

காங்கோ அணி அரைநூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது. இதற்காக அந்த நாட்டில் நேற்று (ஏப்.1) பொது விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிஷேல் கூகா எம்போலடிங்கா (49 வயது) காங்கோ கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருக்கிறார். கால்பந்து போட்டியின்போது அந்த நாட்டின் முதல் பிரதமரின் (பாட்ரிக் லுமும்பா) சிலை பாணியில் 90 நிமிஷமும் அசையாமல் இருந்து பிரபலமானார்.

இந்தக் காரணத்தினால், எம்போலடிங்காவுக்கு ’லுமும்பா வே’ என்ற பட்டப்பெயரையும் காங்கோ கால்பந்து ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.

காங்கோ அணி உலகக் கோப்பையில் போர்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் மோதுகிறது. இந்தப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோவிலும் நடைபெற இருக்கின்றன.

விசா மறுக்கப்பட்டுள்ளதால் இவர் மெக்சிகோவுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

என்னால் மெக்சிகோவுக்குச் செல்ல முடியாது. நாங்கள் கென்யாவில் இருக்கிறோம். எவ்வளவோ முயற்சித்தும் விசா கிடைக்கவில்லை. அதனால், கின்ஷாசாவுக்குத் (காங்கோ தலைநகர்) திரும்ப முடிவெடுத்துள்ளேன்.

நமது சிறுத்தைகளுக்கு (காங்கோ கால்பந்து அணி) நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம் எனக் கூறியுள்ளார்.

Summary

DR Congo superfan 'Lumumba vea' denied visa to watch World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.