மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கால்பந்து உலகக் கோப்பை: 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு!

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான நடுவர்கள் தேர்வு குறித்து...

News image

கால்பந்து உலகக் கோப்பைக்கான கவுன்டவுன் தொடக்கம். - படம்: ஏபி

Updated On :10 ஏப்ரல் 2026, 9:56 am

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 48 அணிகள், பங்கேற்கும் 104 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கின்றன.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகள் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இந்தப் போட்டிகளுக்கான நடுவர்களை ஃபிஃபா அறிவித்துள்ளது. இதில் மூன்று பெண்கள் துணை நடுவர்களாகவும் ஒருவர் விடியோ நடுவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் 2 பெண்கள் உள்பட 52 நடுவர்கள், 88 துணை நடுவர்கள், 30 விடியோ நடுவர்கள் என மொத்தமாக 170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னதாக, 2022 உலகக் கோப்பையில் 3 பெண் நடுவர்கள், 3 பெண் துணை நடுவர்கள் இருந்தார்கள். 6 பெண் நடுவர்களைப் பயன்படுத்துவது என்பது கத்தாரில் தொடங்கிய டிரெண்ட் என ஃபிஃபா தெரிவித்துள்ளது.

Summary

FIFA picks 52 referees for the World Cup, including 2 women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.