மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வானதால் காங்கோவில் பொது விடுமுறை!

காங்கோ நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து...

News image

காங்கோ அணியின் ரசிகர்களும்... - படம்: ஏபி

Updated On :1 ஏப்ரல் 2026, 2:53 pm

கால்பந்து உலகக் கோப்பைக்கு 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக காங்கோ அணி தேர்வாகியுள்ளதால், அந்த நாட்டில் இன்று (ஏப்.1) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் அதிபர், அமைச்சர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக, 1974 உலகக் கோப்பையில் இந்த நாட்ய் ஜெய்ரா எனும் பெயரில் இருந்தபோது உலகக் கோப்பைக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மெக்ஸிகோவில் ஸபோபன் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் 90 நிமிஷங்கள் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

சரியாக 100ஆவது நிமிஷத்தில் காங்கோ அணியின் சிபெங்காவின் கார்னர் கிக்கில், அதே நாட்டின் டிஃபெண்டர் ஆக்செல் டுவான்செபே கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் பொது விடுமுறை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நமது சிறுத்தைகள் 2026 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளதைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பொதுமக்களுக்கு, இன்று ஏப்.1ஆம் தேதி நாடு முழுவதும் பொது விடுமுடையாக அறிவிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் நைஜீரியாவை பெனால்யியில் வென்றது காங்கோ. இதனால், நைஜீரியா கால்பந்து கழகம் காங்கோ அணியின் வீரர்கள் சிலர் இரட்டைக் குடியுரிமைக் கொண்டுள்ளதாகப் புகார் அளித்தது.

இருந்தும் ஃபிஃபா அந்தப் புகாரினை தள்ளுபடி செய்தது. பின்னரே, ஆப்ரிக்கா பிளே ஆஃப்ஸ் சுற்றில் காங்கோ விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

DR Congo declares national holiday over World Cup qualification.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.