மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நான் முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்... ஸ்பெயின் ரசிகர்களின் இஸ்லாமிய வெறுப்புக்குப் பதிலளித்த லாமின் யமால்!

முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கமிட்ட ஸ்பெயின் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுத்த லாமின் யமால் பதிவு குறித்து...

News image

லாமின் யமால். - படம்: இன்ஸ்டா / லாமின் யமால்.

Updated On :1 ஏப்ரல் 2026, 2:22 pm

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லாமின் யமால் (18 வயது) முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கமிட்ட சொந்த நாட்டின் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்பெயினில் பிறந்தாலும் லாமின் யமால் மொராக்கோவின் தந்தைக்கும் கினி நாட்டு தாய்க்குப் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லாமின் யமால் தனது இன்ஸ்டா பதிவில், ”நான் முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி)” எனக் குறிப்பிட்டு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

எகிப்து மற்றும் ஸ்பெயின் அணிக்கான நட்பு ரீதியான போட்டி பார்சிலோனாவின் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் டிராவில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் ஸ்பெயின் ரசிகர்கள் எதிரணி வீரர்களை (எகிப்து) கிண்டல் செய்ய, “யார் எல்லாம் குதிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள்” என முழக்கமிட்டனர்.

இது வழக்கமாக ரியல் மாட்ரிடுக்கு எதிராக குறிப்பிடப்படும் பார்சிலோனா ரசிகர்களின் பாணியான, “யார் எல்லாம் குதிக்கவில்லையோ அவர்கள் மாட்ரிட்” என்பதைப் போலவே இருந்தது. வெறுமனே அணிக்கு எதிரான ஒரு பாடலை மதத்துக்கு எதிராக மாற்றிய செயலைப் பலரும் கண்டித்தார்கள்.

ஸ்பெயின் நாட்டின் காவல்துறையினர் அந்நியர் வெறுப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்களை எழுப்பியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது.

லாமின் யமால் முதல் பாதியில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த மோசமான நிகழ்வு குறித்து அவர் பதிவிட்டதாவது:

நான் முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ். நேற்றி திடலில், ’யார் எல்லாம் குதிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள்’ என்ற முழக்கம் கேட்டது. இது எதிரணிக்கு என்றும் எனக்கானது இல்லை எனவும் தெரியும். ஆனால், ஒரு முஸ்லிமாக இருந்து இந்த அவமரியாதை, சிலதை சகித்துக்கொண்டிருக்க முடியாது.

அனைத்து ரசிகர்கள் இப்படி இல்லை எனத் தெரியும். ஆனால், மதத்தைக் கிண்டல் செய்து பாடல் பாடியவர்கள் முட்டாள்கள், இன வெறியர்கள். கால்பந்து என்பது மகிழவும் ஊக்கப்படுத்தவும்தானே தவிர, அவர்கள் எந்த மதத்தில் இருக்கார்களோ அவர்களை அவமதிக்க அல்ல.

உற்சாகப்படுத்த வந்த ரசிகர்களுக்கு நன்றி. உலகக் கோப்பையில் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். ஸ்பெயின் கால்பந்து கழகமும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Summary

‘Disrespectful and intolerable’ – Barcelona star Lamine Yamal issues statement after anti-Muslim chants during Spain game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.