சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட காலிறுதியில் பார்சிலோனாவுக்கு அத்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சியளித்தது. 0-2 என பார்சிலோனா தோல்வியுற்றது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்து பார்சிலோனா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பார்சிலோனா அணி தனது சொந்த மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்லெடிகோ மாட்ரிட் இடம் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதற்கு முன்பாக, பிப்., 2006ல் பார்சிலோனா தோல்வியுற்றிருந்தது.
சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் கேம்ப் நௌ திடலில் இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் 44ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா டிஃபெண்டர் பா குபார்சிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட ஃபிரீ கிக்கில் 45ஆவது நிமிஷத்தில் அத்லெடிகோ மாட்ரிட்ன் நட்சத்திர வீரர் ஜூலியன் அல்வாரெஸ் சத்தலாக கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் 70ஆவது நிமிஷத்தில் அலெக்சாண்டர் சோர்லாத் சிறப்பான கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் 55 சதவிகித பந்தினை பார்சிலோனா வைத்திருந்தும் ஒரு கோல் கூட அடிக்கமுடியாத அளவுக்கு அத்லெடிகோ சிறப்பாக செயல்பட்டது.
இந்தப் போட்டியில், பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திர வீரர்ரும், நம்.10 ஜெர்ஸியை அணிபவருமான லாமின் யமால் (18 வயது) மிகச்சிறப்பாக விளையாடினார்.
இரண்டு முறை எதிரணியினர்கள் பலரை டிரிபிளிங் செய்து கோல் அடிக்க முயன்றார். ஆனால், அத்லெடிகோ டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடி அதைத் தடுத்தார்கள்.
3 வாய்ப்புகள், 1 மிகப்பெரிய வாய்ப்பு, 16 டூயல்ஸ் வெற்றிகள், 8 டிரிபிள்கள், 8 முறை பந்தினை எதிரணியினரிடம் இருந்து மீட்டு அசத்தினார். தோல்விற்றாலும் லாமின் யமாலின் செயல்பாடுகள் பார்சிலோனா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
Summary
Atlético Defeats Barcelona After 20 Years: Lamine Yamal Steals the Spotlight Even in Defeat!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!

காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



