மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது முக்கியம்..! யமாலுக்கு ஆதரவளித்த வினிசியஸ்!

லாமின் யமாலுக்கு ஆதரவாகப் பேசிய வினிசியஸ் குறித்து...

News image

லாமின் யமால், வினிசியஸ் ஜூனியர். - ஏபி

Updated On :7 ஏப்ரல் 2026, 10:09 am

ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் பார்சிலோனா நட்சத்திரம் லாமின் யமாலுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

எகிப்துக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் ஸ்பெயின் அணியின் ரசிகர்கள் எதிரணி வீரர்களை (எகிப்து) கிண்டல் செய்ய, “யார் எல்லாம் குதிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள்” என முழக்கமிட்டனர்.

லாமின் யமால் தனது இன்ஸ்டா பதிவில், ”நான் முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி)” எனக் குறிப்பிட்டு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் ஆதரவு தெர்வித்துள்ளார். முன்னதாக, நிற வெறிக்கு எதிராக வினிசியஸ் ஜூனியர் பதிவிட்டிருந்தார். அதே காரணத்தினால், அவருக்கு பேலந்தோர் விருது மறுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் வினிசியஸ் ஜூனியர் பேசியிருப்பதாவது:

இது எப்போது பேசுவதற்கு சிரமம் ஏற்படுத்தும் விஷயங்கள் ஆகும். ஆனால், இதுமாதிரியான விஷயங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. லாமின் பேசியது முக்கியத்துவம் பெருகிறது. இது மற்றவர்களுக்கு உதவும்.

நாம் பிரபலமாக இருக்கிறோம்; பணம் இருக்கிறது, இதை சமாளிக்கலாம். ஆனால், ஏழை கறுப்பின மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், இந்தப் போராட்டம் தொடருமென நம்புகிறேன் என்றார்.

Summary

Vinicius Junior hails Lamine Yamal for condemning anti-Muslim chants

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.