கால்பந்து உலகக் கோப்பை 2026க்கு காங்கோ அணி அரை நூற்றாண்டுக்குப் பின்னர் (52 ஆண்டுகள்) தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
ஜமைக்காவுக்கு எதிராக 120 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு அணி தகுதிச் சுற்றுப் போட்டியில் 1-0 என த்ரில் வெற்றி பெற்றது.
மெக்ஸிகோவில் ஸபோபன் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் 90 நிமிஷங்கள் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.
சரியாக 100ஆவது நிமிஷத்தில் காங்கோ அணியின் சிபெங்காவின் கார்னர் கிக்கில், அதே நாட்டின் டிஃபெண்டர் ஆக்செல் டுவான்செபே கோல் அடித்து அசத்தினார்.
இந்த கோல் சரியானதுதானா, கைகளில் பட்டதா என விஏஆர் சோதனைக்குப் பிறகு உறுதிசெய்யப்பட்டது. 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கோவின் கனவு நனவாகியுள்ளது. 120 நிமிஷத்தின் கடின உழைப்பு இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது.
Summary
DR Congo’s World Cup dream: 52 years of heartbreak, 120 minutes of suffering, and a weight lifted against jamaica.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் அணிக்கு விசா அனுமதி!

எபோலா அச்சம்: காங்கோவின் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஸ்பெயின்!

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!

கால்பந்து உலகக் கோப்பை: 96 ஆண்டுகால வரலாற்றில் 8 அணிகள் மட்டுமே சாம்பியன்!
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



