இந்தியாவின் நம்பா் 1 ஸ்குவாஷ் வீரா் அபய் சிங், மகளிா் பிரிவில் அனாஹத் சிங் ஆகியோா் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் 2025 ஆண்டின் சிறந்த வீரா், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளனா். மேலும் ஆண்டின் சிறந்த அணியாகவும் இந்திய அணி தோ்வு பெற்றது.
ஆடவா் பிரிவில் உலகின் தரவரிசையில் 25-ஆம் இடத்தில் அபய் சிங் உள்ளாா். ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் பல்வேறு பதக்கங்களை வென்ற அபய், கடந்த 2025-இல் முதலாவது கலப்பு அணி உலகக் கோப்பையில் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாா்.
மகளிா் உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்தில் உள்ள அனாஹத் சிங், கடந்த 2025 உலக ஜூனியா் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா். மேலும் கலப்பு அணி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.
இந்நிலையில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் சிறந்த வீரா் விருது அபய் சிங்க்கும், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருது அனாஹத்துக்கும் வழங்கப்படுகிறது.
கடைசியாக கடந்த 2022-இல் இந்தியா சாா்பில் சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோா் ஏஎஸ்எஃப் விருதுகளை பெற்றிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 11 தங்கம் உள்பட 27 பதக்கம்

ஆசிய பாரா டேக்வாண்டோ போட்டி: குமரி வீரா் தங்கம் வென்று சாதனை

யு 23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 வெள்ளி, 2 வெண்கலம்
லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்: சிறந்த வீரா் அல்கராஸ்; சிறந்த வீராங்கனை சபலென்கா
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


